இதயக்குருதி குழாய் நோய்களின் இடர்பாடு குறையும் உடலில் உள்ள கொழுப்பு (cholesterol) மற்றும் ட்ரைக்ளிசரைடு அளவுகளை குறைப்பதோடு மட்டுமல்லாமல், ஆபத்தான இரத்த உறைதலை உண்டாக்கும் இரத்தக் கட்டிகளை குறைக்கும்.
இதயக்குருதி குழாய் நோய்கள் வருபவர்களும் சரி, ஏற்கனவே வந்தவர்களுக்கும் சரி, மேற்கூறிய உடல்நல பயன்கள் மிகவும் முக்கிய மானவையாக கருதப்படுகிறது.
அழற்சி குறையும்;
மிளகாய் உண்ணுவதால் ஏற்படும் மற்றொரு மிக முக்கியமான உடல்நல பயன், அழற்சி குறையும். முக்கியமாக கீல்வாதம் உள்ளவர்களுக்கு இது பெரிய நிவாரணியாக விளங்கும். மேலும் மிளகாய் என்பது உடலில் ஏற்பட்டுள்ள வலியை குறைக்கவும் உதவுகிறது.