ப்ரௌன் நிற கொண்டக்கடலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆந்தோசையனின்கள், டெல்பின்டின், சியானிடின், பைட்டோ நியூட்ரியன்ட்டுகள் போன்றவை உள்ளது. மேலும் இதில் ஃபோலேட் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. இதனால் இரத்த நாளங்களில் கொழுப்புக்கள் தங்கி அடைப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டு, மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வருவதற்கான வாய்ப்பு குறையும்.
ப்ரௌன் நிற கொண்டக்கடலையில் கரையும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், அவை கொலஸ்ட்ரால் அளவைக் குறையும். அதற்கு தினமும் 3/4 கப் ப்ரௌன் நிற கொண்டக்கடலையை வேக வைத்து சாப்பிட்டு வாருங்கள். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கும்.