இதய நோய்களை தடுப்பதே இந்த பச்சை பட்டாணியின் மிக முக்கிய பலனாகும். இதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பொருட்களும் சிறிதளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும். பச்சை பட்டாணியின் மூலமாக உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கலாம். இந்த பச்சை பட்டாணி உடலில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவைக் குறைத்து, இரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்புச்சத்தை அதிகரிக்கும். இதன் மூலமாக நமக்கு ஏற்படும் ஏராளமான நோய்களில் இருந்து விடுபடலாம். பச்சை பட்டணியில் உள்ள கௌமெஸ்டிரால் எனப்படும் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் ஒன்றாகும். இந்த காய்கறியை தினமும் சாப்பிட்டு வந்தால், வயிற்று புற்றுநோய்க்கு சிறந்த மருந்தாக அமையும்.