Pearl Millet Rice | Kambu Rice | கம்பு அரிசி |
Product details
கம்பு அரிசி பயன்கள்:-
உடல் பலம்:-
கம்பு பல அத்தியாவசிய சத்துகள் நிறைந்த உணவாகும்.
இதைத் தினந்தோறும் காலையில் கூழ் அல்லதுக் களியாக சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்டக் கொழுப்புகள் தங்குவதைத் தடுத்துத்,
தசைகளுக்கு நல்ல இறுக்கத்தைத் தந்து, உடல் பலத்தைப் பெருக்கும்.
நீரிழிவு:-
நீரிழிவு நோய் தாக்கம் கொண்டவர்கள் சர்க்கரைச் சத்துக்கள் அதிகமுள்ள அரிசி போன்றவற்றைச் சாப்பிடமுடியாது.
அந்த அரிசிக்கு மாற்றாகத் தினமும் கம்பு கூழ், களி, தோசை போன்றவற்றைச் செய்துச் சாப்பிடுவது அவர்களின் ஆரோக்கியத்திற்குச் சிறந்தது.
இழந்த உடல்சக்திகளை மீண்டும் தர வல்லது இந்த கம்பு.
நோய் எதிர்ப்பு :-
சிறுதானியமான கம்பில் பல உடலுக்குத் தேவையான சத்துகளும், வேதிப்பொருள்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளன.
இந்தக் கம்பைத் தொடர்ந்து உணவாக கொள்பவர்களுக்கு உடலில் நோயெதிர்ப்பு திறன் மேம்பட்டு உடலைப்
பல நோய்களின் தாக்கத்திலிருந்துக் காக்கிறது.
நார்சத்து:-
நாம் உண்ணும் உணவுகள் அனைத்தும் எளிதில் செரிமானம் அடைய வேண்டும்.
கம்பு நார்ச்சத்து அதிகம் கொண்டதால் வயிற்றில் செரிமான கோளாறுகள் மற்றும் புண்கள் கொண்டவர்கள் தொடர்ந்துச் சில காலம்
உண்டு வருவதால் வயிறு சம்பந்தமான அத்தனைக் குறைபாடுகளையும் நீக்கும்.
உடல் எடை குறைப்பு :-
பசி அதிகம் எடுப்பவர்கள் அடிக்கடி எதையாவது உண்பதால் அவர்களின் உடலில் கட்டுப்பாடில்லாமல் எடை கூடிவிடுகிறது.
இவர்கள் கம்பு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை உண்பதால் பசியை சரியான நேரத்தில் மட்டுமே எடுக்கச்செய்து,
இவர்களின் உடல் எடையைக் குறைக்கும்.
குடல் புற்று:-
இன்றைய காலங்களில் மனிதர்களுக்குப் பல்வேறு விதமான புற்று நோய்கள் வருகின்றன.
அதில் ஒன்று தான் குடல் புற்று. கம்பு உணவுகளைத் தினந்தோறும் ஒரு முறையேனும் உட்கொள்பவர்களுக்குக் குடல் புற்று
ஏற்படுவதுத் தடுக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
இளமை தோற்றம் :-
கம்பு அதிகம் உட்கொள்பவர்களின் இரத்தத்தில் இருக்கும் செல்களின் பிராணவாயு உபயோகிப்பை அதிகப்படுத்துவதால்,
அவர்களின் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுத்து, தோல் பளப்பளப்பையும் இளமைத் தோற்றத்தையும் தருகிறது.
முதுமை அடைவதை தாமதப்படுத்துகிறது.
தாய்ப்பால் சுரப்பு:-
புதிதாகக் குழந்தை பெற்றச் சில தாய்மார்களுக்கு ஒரு சில சமயங்களில் தாய்ப்பால் சுரப்புக் குறையும் அல்லது நின்றுவிடும்.
இந்த தாய்மார்கள் தினமும் கம்பு கூழ் அல்லது களி போன்றவற்றை உண்பதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
மாதவிடாய் :-
பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாயின் போது சமயங்களில் அதிக இரத்த போக்கும், அடிவயிற்று வலியும் ஏற்படுகின்றன.
இப்படியான நேரங்களில் இளம் சூடாக கம்பு கூழ் அல்லது கம்பு சூப் அருந்த மேற்கண்ட பிரச்சனைகள் தீரும்.
இரத்த கொதிப்பு :-
கம்பு இரத்தத்தில் இறுக்கத்தன்மையைத் தளர்த்தி பிராணவாயு கிரகிப்பை அதிகப்படுத்துவதால் உயர் இரத்த அழுத்தம் போன்றவை
ஏற்படும் வாய்ப்பைத் தடுக்கிறது. இரத்தத்தில் இருக்கும் கழிவுகளை நீக்கி, இரத்தத்தை தூய்மைப்படுத்துகிறது.
இதனால் உடல் சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது.
முடிக்கொட்டுதல் :-
இன்றுப் பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை தலைமுடிக் கொட்டுதல் ஆகும். முடி நன்கு தழைத்து வளர “கெராட்டீன்” எனும் புரதம் அவசியம்.
இது கம்பில் அதிகம் நிறைந்துள்ளது. இதை உணவாக அதிகம் உண்பவர்களுக்கு முடி கொட்டுவதுக் குறையும்.
உடல் சூடு :-
சிலருக்குச் சுற்றுப்புற சூழலாலும், உடலில் ஏற்படும் மாற்றங்களினாலும் உடல் அதிகம் வெப்பமடைந்து,
அதனால் சில பாதிப்புகளைச் சந்திக்கின்றனர். இவர்கள் தினமும் காலை வேளைகளில் கம்பு கூழைப் பருகி வந்தால்
உடல் அதிகம் உஷ்ணமடைவதுக் குறையும்