medicinal plant இதன் இலையை அரைத்து ஒரு கொட்டைப் பாக்களவு எடுத்து பாலுடன் கலந்து காலையில் உட் கொள்ள உடல் வலுக்கும், இவர்களைப் பெண்கள் இச்சை கொள்வர். இதன் இலையை உலர்த்திப் பொடித்து அதே அளவு சர்க்கரை கூட்டி காலை, மாலை இரு வேளையும் 2 -முதல் 4 – கிராம் வரை உட்கொண்டு வர உடல் வலுக்கும் ,அழகு பெரும். பாம்பு கடிக்கு இதன் இலையைக் கசப்புச் சுவை தோன்றும் வரை தின்னும்படி கொடுத்து வர கடி நஞ்சு நீங்கும் . வெண்காரத்தை இதன் இலைச் சாற்றில் அரைத்து புடமிட நீறும் .(பற்பமாகும்)