விரால் மீன் நன்னீரில் வாழும் தன்மையுடைய மீன் இனமாகும். இம்மீன் உள்நாட்டு மீன் இனங்களில் கெண்டை மீன்களை விட, முள் குறைந்த, சுவை மிகுந்த உணவாகும். எனவே, இது அதிக விலை மதிப்புள்ளதாக உள்ளது.விரால் மீனின் தோற்றம் உருண்டை வடிவமாக நீண்ட உடலைப் பெற்றிருக்கும். தலை பாம்பின் தலையைப் போன்று இருக்கும்.