கோழி சாப்பிடுவதால் ஏற்படும் உடல் ஆரோக்கிய நன்மைகள் - Health benefits of chicken in Tamil
சரியான அளவில் கோழி இறைச்சியை உண்டால் அது நமக்கு பல நன்மைகள் பயக்கும். சரியான உடல் ஆரோக்கிய நன்மைகள் பெற கோழி தயாரிக்கப்படும் முறையும் கருத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு உட்கொள்ளும் கோழி கறியால் உண்டாகும் உடல் ஆரோக்கிய நன்மைகள் வந்து கீழே விவாதிக்கப்பட்டுள்ளது.
உடல் எடையைப் பெறுவதற்கு உதவுகிறது: கோழி இறைச்சி வந்து புரதம் நிறைந்த மூலங்களில் ஒன்றாகும். அதை வேக வைத்து அல்லது கிரில் செய்து சாப்பிடும் போது உடல் எடையை குறைக்கவும் தசை வெகுஜனை அதிகரிக்கவும் செய்கிறது. அது மட்டுமின்றி, உங்களது வயறு நிரம்பிய போல ஒரு உணர்வையும் தருகிறது.
எலும்புகள் மற்றும் பற்களை வலுவூட்டுகிறது: கோழி இறைச்சியில் பாஸ்பரஸ் நன்றாகவே அடங்கியுள்ளது. அது எலும்புகளின் மாஸ் உடன் கால்சியத்தையும் கொடுக்கிறது. ஆகையால் உணவில் கோழி இறைச்சி சேர்த்துக்கொள்வதால் எலும்பு இழப்பு மற்றும் எலும்புப்புரையை தடுக்கலாம்.
சலி மற்றும் நெஞ்சு அடைப்பிலிருந்து நிவாரணம்: சூடான கோழி இறைச்சி சூப் தான் சலிக்கு சிறந்த தீர்வுகளில் ஒன்றாகும். அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு நெஞ்சு அடைப்பு மற்றும் தொண்டை வலியிலிருந்து நிவாரணம் தருகிறது.
இரத்த சோகை தடுக்கிறது: வைட்டமின் பி, ஈ மற்றும் கே ஆகியவற்றின் நல்ல அளவு கோழி இறைச்சியில் உள்ளது. இவை அனைத்தும் RBC உற்பத்தியை ஊக்குவிப்பதோடு இரத்த சோகைக்கான ஆபத்தை குறைக்கிறது. சிக்கன் கல்லீரல் போதுமான இரும்புச் சத்துள்ளதால் இரும்புச் சத்து குறைபாடான இரத்த சோகை தடுக்கிறது.
முடி மற்றும் நகங்களுக்கு: கோழி இறைச்சியில் வைட்டமின் ஈ மற்றும் கே உள்ளதினால் அது முடி இழப்பை தடுப்பதோடு முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அது உங்கள் நகங்களை வலுப்படுத்தவும் உதவுகிறது. உடையக்கூடிய நகங்களிலிருந்து இது தடுக்கிறது.
மன ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது: சிக்கன் இறைச்சியில் மிகுந்த அளவு வைட்டமின் பி உள்ளது. இது கவலை மற்றும் மன அழுத்தத்தை தடுக்க உதவுகிறது. இது அல்சைமர் ஆபத்தை குறைப்பதன் மூலம் மூளை செயல்பாடு மற்றும் நினைவகத்தை அதிகரிக்கிறது.