கொத்தமல்லி(Coriander)

உணவை அலங்கரிப்பதற்காக மட்டுமே கொத்தமல்லியைப் பயன்படுத்துகிறோம். ஏதோ கடைசியில் சேர்க்கும் வாசனைப் பொருள் என்ற எண்ணமும் பலருக்கு உண்டு. ஆனால் இதிலிருக்கும் சத்துக்கள் மிகுந்த நன்மை தரக்கூடியவை. சத்துக்கள்: வைட்டமின் பி1, பி2, சி, புரதம், கால்சியம், நார்ச்சத்து, ஆக்சாலிக் அமிலம் இதில் உள்ளன. பலன்கள்: அதிக மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு அதன் பக்கவிளைவைக் குறைத்து, மருந்துக் கழிவை வெளியேற்ற உதவுகிறது. சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் வல்லமை பெற்றது. நம் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை (மெட்டல்ஸ்) வெளியேற்றி, உடலை ஆரோக்கியமாக்கும். ரத்த சோகையைக் குணப்படுத்தும். ரத்தத்தை சுத்திகரிக்கும். பித்தத்தால் ஏற்படும் வாந்தியைப் போக்க, கொத்தமல்லித் துவையலை சாப்பிடலாம். சருமத்தை சீராக்கி பொலிவடையச் செய்யும். டிப்ஸ்: ஒரு டம்ளர் கொத்தமல்லி சாறை வாரம் ஒருமுறை குடித்துவர, நச்சுக்கள், உணவோடு சேர்ந்துள்ள பூச்சி மருந்துகள், ரசாயனங்களை வெளியேற்றும். கவனிக்க: அனைவரும் சாப்பிடலாம்.
Per piece

Similar products

Sorry we're currently not accepting orders