கை, கால்கள் முடங்கிப்போய்விடாமல் தடுக்கிறது என்பதால் இதற்கு முடக்கத்தான் என்று பெயர். மருத்துவ குணங்கள் நிறைந்தது. சத்துக்கள்: புரதம், மாவுச்சத்து, தாது உப்புக்கள் நிறைந்தது. மிகக் குறைந்த அளவில் கொழுப்புச் சத்தும் உள்ளது. பலன்கள்: 40 வயதைக் கடந்தவர்களுக்கு எலும்புத் தேய்மானம் ஏற்படும். முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், எலும்புகளுக்கு உறுதியைத் தரும். வாதத்தைக் கட்டுப்படுத்தும். மூட்டு வலி உள்ளவர்கள் இவற்றை வாரம் ஒரு முறை சாப்பிட்டுவர, வலி இடம் தெரியாமல் நீங்கும். மூட்டுகளில் வீக்கம் இருப்பவர்களும் சாப்பிடலாம். கருவுற்றிருக்கும் பெண்கள் சாப்பிட்டுவர, கால் மூட்டு வலி வராது. டிப்ஸ்: இதை அப்படியே சாப்பிடாமல், நறுக்கி அல்லது அரைத்து, தோசை மாவுடன் கலந்து சாப்பிடலாம். ஆனால் மாவைப் புளிக்கவைக்கக் கூடாது. கவனிக்க: அனைவரும் சாப்பிட ஏற்றது