பாலக்கீரை(palak Keerai)

குளிர்ச்சித்தன்மை கொண்டது. பெரிய பெரிய இலைகள் கொண்டதால், கழுவுவதற்கு மிகவும் சுலபம். சத்துக்கள்: வைட்டமின் கே, ஏ, பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம், காப்பர், இரும்பு, அயோடின், ஃபோலிக் அமிலம், பீட்டாகரோட்டின், ரிபோஃபிளேவின் உள்ளிட்ட சத்துக்கள் நிறைவாகக் கொண்டது. பலன்கள்: உடல் சூட்டைத் தணிக்கும். மூளை வளர்ச்சிக்கு உதவும். சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். ரத்த உற்பத்திக்கு உதவும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது. ஃபோலிக் அமிலம் இருப்பதால், கர்ப்பிணிகளுக்கு நல்லது. டிப்ஸ்: பருப்புடன் சேர்க்காமல் தனியாக சமைத்துச் சாப்பிடுவது நல்லது. 10 கிராம் பாலக்கீரையுடன், அரை டீஸ்பூன் சீரகம், 2 பூண்டு பல் சேர்த்து தண்ணீர்விட்டு, கொதித்ததும் வடிகட்டிக் குடித்தால், வெள்ளைப்படுதல் குணமாகும். கவனிக்க: சைனஸ், ஆஸ்துமா நோயாளிகள் மழைக் காலங்களில் சாப்பிடக் கூடாது.
Per piece

Similar products

Sorry we're currently not accepting orders