
Pen Bird
Product details
சமூக மனிதனை வழிநடத்தும் முதன்மையான சக்திகளில் ஒன்று அவனுடைய சமூக வரலாறு. இந்த வரலாறு ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒவ்வொரு மாதிரியானது. நாட்டு அடிப்படையிலான வரலாறு, மொழி அடிப்படையிலான வரலாறு, வருண அடிப்படையிலான வரலாறு, சாதி அடிப்படையிலான வரலாறு, சமய அடிப்படையிலான வரலாறு என நம் வரலாறு பல கிளைகளையும் உப கிளைகளையும் கொண்டது.
இந்த வரலாற்றுக் கிளைகள் உப கிளைகளின் தனித்தன்மைகளைப் புரிந்துகொள்ளும் போதுதான் நாம் எங்கிருந்து வந்தோம். எப்படி வந்தோம். எதை நோக்கிப் போகவேண்டும் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். தன் வரலாற்றைத் தெரிந்துகொள்ளாத சமூகமும், தவறாகப் புரிந்துகொண்டிருக்கும் சமூகமும். நாம் எந்தப் புதைகுழியிலிருந்து மீண்டு வந்திருக்கிறோம் என்பதை உணராது. ஏதோ மலை உச்சிக்குப் போவதாகக் கற்பனை செய்து, மீண்டும் அந்தப் புதைகுழியிலேயே அகப்பட்டுக் கொள்ளும்.
பொன்னீலன்
சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாவலாசிரியர்.
Similar products