Pen Bird
Product details
*
கன்னியாகுமரி மாவட்டத்தின் தென்கோடியில், சுமார் இரண்டு தலைமுறைகளுக்கு முன் வாழ்ந்த நான்கு குடும்பங்களின் பிரதிபலிப்பே இந்தப் புத்தகம். இன்பமும் துன்பமும் மாறிமாறி வரும் வாழ்க்கைப் பயணத்தில், சின்னமணி எனும் மனிதர் மட்டும் பக்குவப்பட்ட மனதுடன் உலாவருகிறார். குடும்ப உறவுகளுக்கு ஏற்ப தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அவர் தள்ளப்படும்போது, நிம்மதியா அல்லது சமரசமா என்பதை இந்நாவல் பதிவு செய்கிறது.
இது ஒரு குடும்பத்தின் கதை மட்டுமல்ல,
ஒரு இனத்தின் போராட்டக் கதை!
இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நிகழ்ந்த உயிர்ப்பலிகள், அடக்குமுறைகள் மற்றும் விடுதலைக்கான ஊர்வலங்களின் பின்னணியில், அன்றைய வாழ்வியலையும் மனிதர்களின் உளவியலையும் கண்முன்னே விரிய வைக்கும் அழுத்தமான வரலாற்று ஆவணம் இது.
குடும்பச் சூழலில் சிக்குண்ட மனிதர்கள் அரசியலில் இருந்து எப்படி விலகி இருக்கின்றனர் என்பதையும், அன்றைய சூழலில் வாழ்ந்த வாழ்வியலையும் இந்நாவல் அப்படியே கண்முன்னே விரிய வைக்கிறது.
Similar products