Search for products..

Home / Categories / Novel /

Kalvanin Kadhali (கள்வனின் காதலி)

Kalvanin Kadhali (கள்வனின் காதலி)




Product details

மனிதர்களுடைய இதயந்தான் என்ன ஆச்சரியமான இயல்பு உடையது? யாரிடத்திலே நம்முடைய அன்புக்குக்கங்கு கரையில்லையோ, அவர் மேலேதான் நமக்குக் கோபமும் அளவு கடந்து பொங்குகிறது. யாருடைய பெயரைக் கேட்ட மாத்திரத்தில் இதயம் கனிந்து உருகுகிறதோ, அவர் எதிரே வரும்போது வாயானது கடும் மொழிகளைச் சொல்கிறது. யாரைப் பார்க்கவேண்டும், பார்க்கவேண்டும் என்று உடம்பின் ஒவ்வொரு நரம்பும் துடித்துக் கொண்டிருக்கிறதோ, அப்படிப்பட்டவர் வந்த உடனே “ஏன் வந்தாய்?” என்று கேட்பதுபோல் நடந்துகொள்ளச் சொல்கின்றது. யாருடைய பிரிவினால் உயிரே பிரிந்துபோவது போன்ற வேதனை உண்டாகிறதோ, அத்தகையவரை உடனே போகச் செய்யும்படியான வார்த்தைகளையும் சொல்லத் தூண்டுகிறது! மனித இருதயம் உண்மையிலே மிகவும் ஆச்சரியமான இயல்பு உடையதுதான்.

 
கல்கியின் முதல் நாவல்.

Similar products


Home

Cart

Account