Pen Bird
Product details
சினிமா அவருடைய மூச்சு என்று சொல்வார்கள். சுவாசம் மட்டுமல்ல, ஹி லிவ்ஸ் இட். சினிமாதான் வாழ்க்கை. சினிமாதான் பொழுதுபோக்கு. கனவில்கூட சினிமாதான். இருபத்துநாலு மணிநேரமும் அவருக்கு சினிமா சிந்தனைதான். ஏன் இப்படிச் சொல்கிறேன்... என்றைக்காவது அவரை கன்ஸ்யூமர் குட்ஸ் விளம்பரத்திலே நாம் அவரைப் பார்த்திருக்கிறோமா? இவ்வளவு பெரிய செலிபிரிட்டி ஸ்டேட்டஸை வைத்துக்கொண்டு கமர்ஷியல் விளம்பரங்களில் என்றைக்காவது ஒருநாள் தலைகாட்டியிருக்கிறாரா? அவர் மட்டும் நினைத்திருந்தால் கோடிகோடியாக அதிலேயே சம்பாதித்திருக்க முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. அவருக்கு சினிமாவில் ஏற்பட்ட பண நட்டங்களை ஒருவிதத்தில் இதன்மூலம் ஈடுகட்டியிருக்க முடியும். ஆனால் அதில் நாட்டமில்லை அவருக்கு. மிகப் பிடிவாதமாகயிருக்கிறார். சினிமாவைத் தவிர வேறு எந்த வகையிலும் பணம் ஈட்டுவதில் அவருக்கு ஈடுபாடு இல்லை. இஷ்டமில்லை. திஸ் இஸ் ஹிஸ் லாயல்டி என்று சொல்லலாம்.
- கே.பாலசந்தர்
Similar products