Search for products..

Home / Categories / Novel /

Naankal (நான்கள்)

Naankal (நான்கள்)




Product details

'ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் உலகம் இருக்கிறது.
எத்தனை மனிதர்களோ அத்தனை உலகங்கள்.'

*

தனது உலகத்தை வெளிச்சம்போட்டுக் காட்டவே ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைத் தேடிக்கொண்டிருக்கிறோம். நம்பிக்கையற்ற உறவாக போய்க்கொண்டிருக்கும் இவ்வுலகில் அவரவர் உலகம் அவரவர்களுக்குள்ளேயே புதைந்து மடிந்துவிடுகிறது.
தனது உலகை, தனக்கு மட்டுமே தெரிந்த உலகை, தனக்கு மட்டுமே என்றுள்ள உறவுகளிடம் பகிர்ந்துகொள்ள மனம் துடிக்கும். காரணம் அவ்வுலகில் அவர்களும் உள்ளனர்; அவர்கள் மட்டுமே கூட இருக்கலாம். அப்படிப்பட்ட உறவுகள் நம்மைப் பயன்படுத்திவிட்டுச் செல்வதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. 
அதனால், தற்போது மாறிவரும் மனிதர் சூழ்ந்த இவ்வுலகில், உறவுகள் தேவைக்காக மட்டுமே என்று மாறிவருகிறது. அதனால் ஒவ்வொருவருக்குள்ளும் தனித்து ஒரு உலகம் தனக்கு என்று மட்டுமே இயங்கி வருகிறது. அந்த உலகில் உறவு இருக்காது, உறக்கம் இருக்காது, அன்பு இருக்காது, கருணை, பாசம், காதல் என எதுவும் இருக்காது. முழுக்க முழுக்க ஏமாற்றமும் கவலையும் மட்டுமே எஞ்சியிருக்கும்.
அங்கே நாங்கள் இருக்காது. நான்கள் இருக்கும்.


Similar products


Home

Cart

Account