Pen Bird
Product details
'பெரிய புராணம்' எனப்படும் திருத்தொண்டர் புராணம், கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் சேக்கிழார் பெருமானால் இயற்றப்பட்ட சைவ சமயப் பெருநூல் ஆகும்.
சைவத்தின் கருவூலமாக விளங்கும் இந்நூல் சிவபெருமானின் தொண்டில் திளைத்த அறுபத்து மூன்று நாயன்மார்களின் வாழ்க்கையையும், அவர்களது அருட்செயல்களையும் விவரிக்கிறது. மேலும், அவர்கள் மேற்கொண்ட தொண்டின் மேன்மையாலும், இடைவிடாத பக்தியாலும் முத்திப் பேறு அடைந்த விதத்தையும் இந்நூல் விரிவாக எடுத்துரைக்கிறது.
இது வெறும் சமய நூலாக மட்டும் இல்லாமல், அக்காலத்திய தமிழகத்தின் சமூக நிலை, மக்களின் வாழ்வியல், தொழில் முறைகள், ஆட்சிச் சிறப்பு போன்றவற்றையும் ஒரு வரலாற்று ஆவணமாகப் பதிவு செய்கிறது.
சமயத்தின் மேன்மையையும், தொண்டே தெய்வம் என்ற ஒப்பற்ற தத்துவத்தையும், எந்தவித வேறுபாடும் இன்றி, பக்தி ஒன்றே முக்திக்கு வழி என்ற உண்மையையும் அழுத்தமாக உணர்த்துகிறது.
சுமார் 4,273 விருத்தப் பாக்களால் ஆன இந்தக் காப்பியத்தை, எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம், அதன் சுவையும் வீரியமும் சற்றும் குறையாமல், முழுநூலும் எளிய உரைநடையில் படைக்கப்பட்டுள்ளது.
Similar products