Pen Bird
Product details
சுமார் 700 ஸ்லோகங்கள் அடங்கிய பகவத் கீதை, மகாபாரதத்தில் அடங்கியுள்ள ஒரு பகுதியாகும். குருக்ஷேத்ர யுத்தத்தில் அர்ஜுனனுக்கு ஏற்பட்ட தயக்கத்தைப் போக்குவதற்காக, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சிறிது நேரம் எடுத்துக்கொண்டு, அந்தப் பதட்டமான போர்க்கள சூழ்நிலையிலும், அர்ஜுனனுக்கு ஏற்பட்ட தயக்கத்தை போக்கி, அவனுக்குத் தேவையான ஞானத்தைப் போதித்து, அவன் அறியாமையை நீக்கி, மனதை தெளிவுபடுத்தி, அவனைப் போருக்கு தயார்படுத்தியதன் சாரமாகும்.
இதனை ஆசிரியர், மூலப் பாடல்களில் வடமொழியில் உள்ளபடியே, சுலோகங்களின் நேரடியானப் பொருளை மட்டுமே தமிழில் எடுத்துக் கொடுத்திருக்கிறார். எந்த தத்துவக் கோட்பாடுகளையும் ஒட்டி, விளக்கம் கூற முயற்சி செய்யவில்லை.
*
இந்த அறிவினை, கட்டுப்பாடற்ற வாழ்க்கை வாழ்பவருக்கும், என்னிடம் பக்தியில்லாதவர்க்கும், என்னைப் பழிப்பவர்க்கும், கடமைகள் செய்யாதவர்க்கும், எப்போதும் நீ கூறாமலிருப்பாய். (ஸ்ரீமத் பகவத் கீதை 18.67)
Similar products