Pen Bird
Product details
வெறும் வாசிப்பு அனுபவத்தைத் தாண்டி, ‘தமிழகத் தொழில் முகங்கள்’ மண்ணின் மகத்துவத்தையும், மனிதர்களின் தொழில் நுட்பத்தையும், சந்தைப் பொருளாதாரத்தின் சுழற்சியையும் இந்த நூல் அப்பட்டமாகக் காட்டுகிறது.
வாசனைமிகுந்த மதுரை மல்லிகை சாகுபடியின் நுணுக்கங்கள், அதன் சர்வதேசப் பயணங்கள், விவசாயிகளின் தினசரி போராட்டங்கள்.
திருடனுக்கே சவால் விடுகிற திண்டுக்கல் பூட்டுகளின் ரகசியங்கள், ஏழு 'லீவர்' பூட்டுகளின் பாரம்பரியம், நவீன போட்டியில் நலிந்து வரும் குடிசைத் தொழிலின் வேதனை.
'ரிலாக்ஸ்' மனநிலையின் அடையாளமான ஈரோடு கைலிகள் உலகமான கதை, தறிக்கூடத்தில் உருவாகும் வண்ணமயமான டிசைன்கள், கோடிக் கணக்கில் புரளும் வியாபாரம், பன்னாட்டுச் சந்தையின் வாய்ப்புகள்.
இப்படி, தமிழகத்தின் பல்லாயிரம் மக்களின் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கும் தனித்துவமான பல தொழில்களின் ஆழமான படப்பிடிப்பு இது. பிரச்சனைகள், சவால்கள், நம்பிக்கைகள், வளர்ச்சியின் வாய்ப்புகள் என அனைத்தையும் இந்த நூல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
தமிழகத்தின் வேர்களுக்குள் பயணித்து, அதன் பொருளாதார மற்றும் பண்பாட்டு முகங்களைப் புரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்தப் புத்தகம் ஒரு சிறந்த கையேடு! என்பதில் சந்தேகம் இல்லை.
Similar products