Search for products..

Home / Categories / Self Help /

Vaazhvom Valathudan (வாழ்வோம் வளத்துடன்)

Vaazhvom Valathudan (வாழ்வோம் வளத்துடன்)




Product details

வாழ்க்கை என்பது இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இடைப்பட்டதுதான் என்ற வாழ்வியல் உண்மையை உணர்ந்து, இன்பத்தில் துள்ளாமல், துன்பத்தில் துவளாமல் வாழப் பழகுவது எப்படி என்பதை இந்நூல் விளக்குகிறது.

நீந்துவது எப்படி என எத்தனை புத்தகங்களைப் படித்தாலும் நம்மால் நீந்த முடியாது. தண்ணீரில் இறங்கித்தான் நீந்தப் பழக முடியும். அதைப்போல் வாழ்க்கையை வாழ்வதற்கும் நாம் வாழ்க்கையில் இறங்கிட வேண்டும். அவ்வாறு வாழ்க்கையில் இறங்கும்போது அனுபவமே நமக்கு வாழ்க்கையைக் கற்பிக்கும். அனுபவத்தின் மூலம் வாழ்க்கையைக் கற்றுக்கொள்ள முயற்சித்தால் காலம் கடந்திருக்கும். காலம் கடந்தபிறகு வரும் அறிவு நிலையால் பயனில்லை என்றுதான், எப்படி வாழ வேண்டும் என்பதை நமக்கு இலக்கியங்கள் கற்பிக்கின்றன. 

இந்த நூல்,

  • பேராசையைத் தவிர்த்து, தேவையானவற்றோடு மகிழ்ச்சியுடன் வாழும் கலையைக் கற்றுத்தருகிறது. 
  • தோல்வியை விடா முயற்சியால் வெற்றியாக மாற்றும் மன வலிமையை ஊட்டுகிறது.
    தூய்மையான மனமே இறைவன் உறையும் இடம் என்ற உண்மையை உணர்த்தி, செயலில் கவனம் செலுத்தச் செய்கிறது.
  • நல்ல கருத்துகள் அல்லது நல்ல மனிதர்கள் எந்தச் சூழலில் தோன்றினாலும், அதை ஏற்றுப் போற்ற வேண்டிய மனப்பக்குவத்தின் அவசியத்தை உணர்த்துகிறது. 

வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ, மனத்தைப் பக்குவப்படுத்த உதவும் ஒரு சிறந்த வழிகாட்டி இந்தப் புத்தகம்.


Similar products


Home

Cart

Account