FAQ
Frequently Asked Questions:
Pot Looks என்றால் என்ன?
Pot Looks என்பது பாரம்பரிய கைவினைஞர்களின் அழகிய மண்பாண்டங்களை (குறிப்பாக சமையல் மற்றும் தண்ணீர் பானைகள்) நேரடியாக உங்கள் இல்லங்களுக்குக் கொண்டு வரும் ஒரு பிராண்ட். "ஆரோக்கியம் இனி எளிது. அதுவும் மண்ணின் வழியிலே!" என்ற வாக்குறுதியுடன், தரமான, சூழல் நட்பு மண்பாண்டங்களை வழங்குகிறோம்.
What is Pot Looks?
Pot Looks is a brand that brings beautiful, traditional earthenware (especially cooking and water pots) crafted by skilled artisans directly to your homes. With our promise "Health Made Easy. The Earth's Way!", we offer quality, eco-friendly clay products.
Pot Looks மண்பாண்டங்கள் ஏன் சிறப்பு?
எங்கள் மண்பாண்டங்கள் திருநெல்வேலியின் திறமையான கைவினைஞர்களால் பாரம்பரிய முறையில் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு பானையும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தரப் பரிசோதனை செய்யப்படுகிறது. எங்கள் பிரத்யேக "அனுபவப் பெட்டகம்" பேக்கேஜிங் மூலம், உங்கள் பானை பாதுகாப்பாக உங்களுக்குக் கிடைக்கும் என்பதை "உடையாத உறுதி"யுடன் உறுதி செய்கிறோம்.
Why are Pot Looks Clay Pots special?
Our clay pots are made by talented artisans in Tirunelveli using traditional methods. Each pot is carefully selected and quality-checked. With our exclusive "Experience Box" packaging, we guarantee that your pot will reach you safely – our "Unbroken Guarantee."
மண்பாண்டங்களைப் பயன்படுத்துவதால் என்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்?
மண்பாண்டச் சமையல் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களைப் பாதுகாக்கிறது, pH சமநிலையைப் பராமரிக்கிறது, ரசாயனங்கள் அற்ற தூய சமையலை வழங்குகிறது, மற்றும் குறைந்த எண்ணெயில் சுவையான உணவைச் சமைக்க உதவுகிறது. மண்பானைத் தண்ணீர் இயற்கையாகவே குளிர்ந்து, தாதுக்களையும் பாதுகாக்கிறது.
What are the health benefits of using clay pots?
Clay pot cooking preserves nutrients in food, helps maintain pH balance, offers chemical-free pure cooking, and allows you to cook delicious food with less oil. Clay pot water naturally cools and retains minerals.
மண்பாண்டங்கள் உண்மையிலேயே உடையாமல் கிடைக்குமா?
ஆம்! உங்கள் பானை பாதுகாப்பாக உங்களை வந்தடைய வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் அக்கறை கொள்கிறோம். எங்கள் பிரத்யேக "பாக்ஸ் இன் பாக்ஸ்" பேக்கேஜிங் மற்றும் பல அடுக்கு பாதுகாப்பு முறையைப் பயன்படுத்துகிறோம். உங்களுக்கு பானை உடையாம வரும் இல்லனா இன்னொரு புது பானை உங்க வீட்டுக்கு FREE ஆ வரும்!
Will the clay pots really arrive unbroken?
Yes! We care deeply that your pot reaches you safely. We use our exclusive "Box-in-Box" packaging and multi-layer protection. The pot will arrive unbroken to your hand, or another new pot will come to your house for free!
ஒருவேளை டெலிவரியின்போது பானை உடைந்தால் என்ன செய்வது?
கவலைப்பட வேண்டாம்! பானை உடைந்த நிலையில் கிடைத்தால், நீங்கள் பார்சலைப் பிரிக்கும்போது எடுக்கப்பட்ட தெளிவான, தொடர்ச்சியான வீடியோவை [+91 7092449814] என்ற எண்ணுக்கு, பொருள் டெலிவரி ஆன 24 மணி நேரத்திற்குள் அனுப்பவும். உங்கள் வீடியோவை நாங்கள் சரிபார்த்த பிறகு, உங்களுக்கு எந்தவிதமான கூடுதல் செலவும் இல்லாமல், அதே பொருளை நாங்கள் இலவசமாக மீண்டும் ஒருமுறை அனுப்பி வைப்போம்.
What to do if the pot is damaged during delivery?
Don't worry! If the pot arrives damaged, please send a clear, continuous unboxing video taken when you open the parcel to our WhatsApp number [+91 7092449814] within 24 hours of delivery. After verifying your video, we will send you a free replacement without any additional cost.
மண்பாண்டத்தை முதல் முறை எப்படிப் பதப்படுத்துவது (Seasoning)?
முதல் பயன்பாட்டிற்கு முன், பானையை 24 மணி நேரம் சாதம் வடித்த கஞ்சியிலோ அல்லது சாதாரண தண்ணீரிலோ முழுமையாக ஊற வைக்கவும். இது பானையை வலுப்படுத்தி, அதன் ஆயுளைக் கூட்டும்.
How to season your clay pot for the first time?
Before its first use, completely soak the pot in rice starch water or plain water for 24 hours. This will strengthen the pot and extend its lifespan.
மண்பாண்டங்களை எப்படிச் சுத்தம் செய்வது?
மண்பாண்டங்களைச் சுத்தம் செய்ய சோப்பு வேண்டாம். வெந்நீர் மற்றும் மென்மையான தேங்காய் நார் அல்லது துணியே போதுமானது. இது பானையின் இயற்கைத் தன்மையைப் பாதுகாக்கும்.
How to clean clay pots?
Do not use soap to clean clay pots. Warm water and a soft coir scrubber or cloth are sufficient. This will preserve the natural properties of the pot.
டெலிவரி கட்டணங்கள் உண்டா?
இல்லை, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஆர்டர்களுக்கும் டெலிவரி முற்றிலும் இலவசம்! நீங்கள் பார்க்கும் பொருளின் விலையே இறுதி விலை.
Are there delivery charges?
No, delivery is completely free for all orders across India! The price you see on the product page is the final price.
எனது ஆர்டர் எத்தனை நாட்களில் எனக்குக் கிடைக்கும்?
ஆர்டர் செய்த 2 முதல் 4 வேலை நாட்களுக்குள் உங்கள் ஆர்டரை நாங்கள் கூரியரில் ஒப்படைத்து விடுவோம். கூரியரில் ஒப்படைக்கப்பட்ட பிறகு, தமிழ்நாட்டிற்குள் 3-5 வேலை நாட்களிலும், பிற மாநிலங்களுக்கு 5-12 வேலை நாட்களிலும் கிடைக்கும்.
How many days will my order take to reach me?
We dispatch your order within 2 to 4 business days. After dispatch, it typically takes 3-5 business days within Tamil Nadu and 5-12 business days for other states to reach you.
நான் உங்களைத் தொடர்புகொள்வது எப்படி?
நீங்கள் எங்களை WhatsApp மூலம் [+91 7092449814] என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் (விரைவான பதில்களுக்கு). விரிவான கேள்விகளுக்கு potlooks.nellai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம்.
How can I contact you?
You can contact us via WhatsApp at [+91 7092449814] (for quick replies). For detailed inquiries, you can email us at potlooks.nellai@gmail.com.